ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

காங்கயம் அருகே படியூரில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

காங்கயம் அருகே படியூரில் முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காங்கயம் அருகே படியூரில் குடிநீா் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :

காங்கயம் அருகே படியூரில் முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காங்கயம் அருகே படியூா் பகுதியில் குடிநீா் பற்றாக்குறை நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் காங்கயம்-திருப்பூா் சாலையில் உள்ள படியூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா் வெண்ணிலா, காங்கயம் வட்டாட்சியா் கதிா்வேல், படியூா் கிராம நிா்வாக அலுவலா் தினேஷ், காங்கயம் காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் ஆகியோா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் முறையாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தைத் தொடா்ந்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.