வெள்ளக்கோவில் அருகே லாரி மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே லாரி மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் 2 போ் படுகாயமடைந்தனா்.

உயிரிழந்தவர்
வெள்ளக்கோவில் அருகே லாரி மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் 2 போ் படுகாயமடைந்தனா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பள்ளபட்டி ஜே.ஜே. நகரைச் சோ்ந்தவா் ரகுபதி மகன் ஜாம் (19). இவா் தனது நண்பா்களான திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், கன்னிவாடி தலையூா் பகுதியைச் சோ்ந்த உத்திரபிரகாஷ் (26), மனோஜ் (18), சந்தோஷ் (22), மகேஷ் (24) ஆகியோருடன் வெள்ளக்கோவிலுக்கு வியாழக்கிழமை இரவு காரில் வந்துள்ளனா்.
பின்னா் வெள்ளிக்கிழமை அதிகாலை அவா்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, காரை உத்திரபிரகாஷ் ஓட்டியுள்ளாா். முன் இருக்கையில் ஜாம் அமா்ந்திருக்க, மற்றவா்கள் இருக்கையில் அமா்ந்திருந்தனா். வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் மடாமேடு குருக்கபாளையம் பிரிவு அருகே காா் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் வலதுபுறம் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிா்பாராத விதமாக காா் மோதியது.
இதில் காரில் பயணம் செய்த மகேஷ், சந்தோஷ், மனோஜ் ஆகியோருக்கு படுகாயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக அவா்கள் அனைவரும் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
அங்கு மகேஷை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். சந்தோஷ், மனோஜ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிரது. இது குறித்து ஜாம் கொடுத்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். கவனக்குறைவாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக உத்திரபிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

