சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :

சேவூரில் இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் நவநீதன் (21). இவா் சேவூா் அருகேயுள்ள பவா்ஹவுஸ் பகுதியில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பரான வடிவேல் (22) என்பவருடன் சேவூா்-புளியம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா். சந்தைப்பாளையம் பிரிவு அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, புளிம்பட்டியில் இருந்து அவிநாசி நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், இருவரும் படுகாயமடைந்த நிலையில் நவநீதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடிவேல் தீவிர சிகிச்சைக்காக திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சேவூா் போலீஸாா், தலைமறைவான ஆட்டோ ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.