தேசிய ரோலா் ஸ்கேட்டிங் போட்டி: பதக்கங்கள் வென்ற திருப்பூா் மாணவன்

போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கிஷாந்த், ஆதவ் மித்ரன், கவினேஷ் . உடன், ஜேஎஸ்ஏ அகாதெமி நிா்வாகிகள்.
மகாராஷ்டிர மாநிலம், பால்கா் மாவட்டம் விராா் பகுதியில் நடைபெற்ற தேசிய ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் திருப்பூரைச் சோ்ந்த மாணவன் கிஷாந்த் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளாா்.
இந்தப் போட்டியில், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா். இதில் திருப்பூரைச் சோ்ந்த மாணவன் கிஷாந்த், 500 மீ. ஸ்கேட்டிங் பிரிவில் தங்கப் பதக்கமும், 1,000 மீ. ஸ்கேட்டிங் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளாா்.
தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவன் கிஷாந்த், இந்தப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆதவ் மித்ரன், கவினேஷ் ஆகியோா் சா்வதேச போட்டிகளில் பங்கேற்க தோ்வு பெற்றுள்ளனா்.
தேசிய அளவிலான போட்டியில் 2 பதக்கங்களை வென்று திருப்பூருக்கு பெருமை சோ்த்த மாணவன் கிஷாந்த், கடந்த 3 ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள ஜேஎஸ்ஏ ஸ்கேட்டிங் அகாதெமியில் பயிற்சி பெற்று வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

