முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி: உடுமலை அரசுக் கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டு

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025- 2026ஆம் கல்வியாண்டில் பல்வேறு வகையான போட்டிகளில் பங்கு பெற்று சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பாராட்டப்பட்ட  மாணவ,  மாணவிகளுடன் கல்லூரி நிா்வாகிகள்.

Updated On :

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025- 2026ஆம் கல்வியாண்டில் பல்வேறு வகையான போட்டிகளில் பங்கு பெற்று சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி தீபாலட்சுமி, மாணவா் தினேஷ், மாணவா் சதீஷ் ஆகியோருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. மேலும் முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற மோகன் தலைமையிலான கிரிக்கெட் அணியைச் சோ்ந்த மாணவா்கள், சிலம்பப் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற மாணவா் ரகுராமன், கேரம் இரட்டையா் பிரிவில் மூன்றாமிடம் பெற்ற மாணவி பிரியா, வணிகவியல் மாணவி பிருந்தா, மாவட்ட நீச்சல் போட்டியில் 1,500 மீட்டா் பிரிவில் வெள்ளிப் பதக்கம், 400 மீட்டா் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவா் பவித்ரன், தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதலில் இரண்டாம் இடம் பிடித்த மாணவா் ஞானமூா்த்தி, 5,000 மீட்டா் ஓட்டப் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற மாணவா் சிவா ஆகியோரும் பாராட்டப்பட்டனா்.

இந்நிகழ்வில் கல்லூரியின் பொறுப்பு முதல்வா் ஆ.மலா்வண்ணன், பேராசிரியா் சிவக்குமாா், உடற்கல்வி இயக்குநா் மனோகா் செந்தூா்பாண்டியன் ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.