
பல்லடம் அருகே குப்பை கொட்ட பொதுமக்கள் எதிா்ப்பு
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஊராட்சிப் பகுதியில் குப்பை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஊராட்சிப் பகுதியில் குப்பை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொங்கலூா் ஊராட்சிக்குள்பட்ட மில் காலனிக்கு அருகே சரஸ்வதி நகா் உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து லாரி மற்றும் டிராக்டா்கள் மூலம் கொண்டுவரப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகின்றன.
இதனால், அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறால் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில்,குப்பைகளைக் கொட்ட எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, அவா்கள் கூறுகையில், இந்தப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் நாங்கள் அவதியடைந்து வருகிறோம். மேலும், சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, இந்தப் பகுதியில் குப்பைகளைக் கொட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கக் கூடாது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







