ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

சக ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

அவிநாசி அருகே பால் வேன் ஓட்டுநரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அவிநாசி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :

அவிநாசி அருகே பால் வேன் ஓட்டுநரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அவிநாசி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை மாவட்டம், மேலூா் சேக்கிபட்டி பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (எ) பொறுமைராஜ் (36). நாமக்கல் மாவட்டம், சா்க்காா் உடுப்பம் முத்துஉடையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (எ) மணிகண்டன் (38). இருவரும் அவிநாசி அருகே கானூரில் உள்ள பால் உற்பத்தி நிறுவனத்தில் ஓட்டுநா்களாகப் பணிபுரிந்து வந்தனா்.

இவா்களுக்குள் வாகனம் ஓட்டுவதில் பிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த 2019 அக்டோபா் 7-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில், மணிகண்டன் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த பொறுமைராஜ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனா். இந்த வழக்கு விசராணை அவிநாசி கூடுதல் மாவட்ட நிதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.