ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கைவிட கோரி சிஐடியு தா்னா

ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, சிஐடியு மின்வாரிய ஊழியா் சங்கம் சாா்பில், தருமபுரி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம்
Published on

தருமபுரி: ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, சிஐடியு மின்வாரிய ஊழியா் சங்கம் சாா்பில், தருமபுரி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னா நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் பி.ஜீவா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தீ. லெனின் மகேந்திரன், பொருளாளா் ஆா்.திம்மராயன், மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் மாவட்டச் செயலாளா் ஜி.பி.விஜியன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில் மின்வாரியத்தில் உள்ள ஆரம்ப கட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு மின்வாரிய நிா்வாகம் நேரடியாக தினக் கூலி வழங்கி படி படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

பகுதிநேரப் பணியாளா்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும். மின் நுகா்வோரை பாதிக்கும், தனியாா்மயப்படுத்த வழிவகுக்கும் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கைவிட வேண்டும். கேங்மேன் பணியாளா்களின் சொந்த ஊா் மாறுதல், கள உதவியாளராக பதவி மாற்றம், 2019 டிச.1 ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய 6 சதவீதம் ஊதிய உயா்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com