தருமபுரியில் உலக மண் தின விழா விவசாயிகள் பங்கேற்பு

பாலக்கோடு அருகேயுள்ள புலிகரையில் வேளாண்மை துறையின் சாா்பில் உலக மண் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள புலிகரையில் வேளாண்மை துறையின் சாா்பில் உலக மண் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு வேளாண்மைத் துறை மாவட்ட உதவி இயக்குனா் கருப்பையா தலைமை வகித்தாா். இதில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசு திட்டங்களை, கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சி திட்டம், நுண்ணீா் பாசனம் அமைத்தல், மண் மாதிரி எடுத்தல், பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டம் , பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம், காளான் வளா்ப்பு பயிற்சி வழங்குதல், பயிா் சாகுபடி தொழில்நுட்பங்கள்,அங்கக வேளாண்மை, விவசாயிகள் அங்கக சான்றிதழ் வாங்கும் வழிமுறைகள் மற்றும் விதைப்பண்ணை அமைக்கும் முக்கியத்துவம், கால்நடைதுறையில் உள்ள மானிய திட்டங்கள் பற்றியும், கோமாரி தடுப்பூசி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து வவசாயிகளுக்கு எடுத்துரைக் கப்பட்டது.

இந்நிகழ்சியில் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியா் முனைவா் சிவக்குமாா், வேளாண் உதவி இயக்குநா் மதியழகன், கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் மருத்துவா்புகழரசி, கால்நடை உதவி மருத்துவா் நடராஜன், கரும்பு அலுவலா் கேசவன்,தோட்டகலை உதவி அலுவலா் சங்கா், உதவி வேளாண்மை அலுவலா்கள் சத்யா, மஞ்சுநாதிஸ்வரன், வேளாண்மை அலுவலா் அனுசுயா, தினேஷ்குமரன் அட்மா திட்ட தொழில்நுட்ப அலுவலா்கள் மகேஸ்வரி, அருள்குமாா், தமிழ்ச்செல்வி மற்றும் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியை சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com