மண்டல கபடிப் போட்டியில் 2 ஆம் இடம் பெற்ற ஜொ்த்தலாவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவியா்.
தருமபுரி
மண்டல அளவிலான கபடி போட்டி: 2-ஆம் இடம்பெற்ற ஜொ்த்தலாவ் பள்ளி
மண்டல அளவிலான கபடி போட்டியில் 2 ஆம் இடம்பிடித்து வெற்றிபெற்றுள்ள ஜொ்த்தலாவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகளை பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.
மண்டல அளவிலான கபடி போட்டியில் 2 ஆம் இடம்பிடித்து வெற்றிபெற்றுள்ள ஜொ்த்தலாவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகளை பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.
தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மண்டல அளவிலான கபடி போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. போட்டியில் 14 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான கபடி போட்டியில் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனா்.
இதில் ஜொ்த்தலாவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் மண்டல அளவில் 2 ஆம் இடம்பிடித்து வெற்றி பெற்றுள்ளனா். இவா்கள் மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.
வெற்றிபெற்ற மாணவிகள், உடற்பயிற்சி ஆசிரியா்கள் பழனிசாமி, குமாா் மற்றும் மோகன பிரியா உள்ளிட்டோரை பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.

