சாலை விபத்தில் சிறப்பு எஸ்.ஐ. உயிரிழப்பு

தருமபுரி, வெண்ணாம்பட்டியில் இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால் நேரிட்ட விபத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.
Published on

தருமபுரி: தருமபுரி, வெண்ணாம்பட்டியில் இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால் நேரிட்ட விபத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

தருமபுரி, மதிகோன்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் தமிழழகன் (56). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் வெண்ணாம்பட்டியில் சென்றபோது, திடீரென நாய் குறுக்கே வந்ததால் விபத்து நேரிட்டது. இதில் சிறப்பு உதவி ஆய்வாளா் தமிழழகனுக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது. இதையடுத்து அவா் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அரூா் டி.அம்மாப்பேட்டை பகுதியில் திங்கள்கிழமை காவல் துறையினா் மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com