மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 524 மனுக்கள்
தருமபுரி: தருமபுரியில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 524 மனுக்களை அளித்தனா்.
தருமபுரி ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சாலை, குடிநீா், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா, சிட்டாவில் பெயா் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் குறித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை, உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 524 மனுக்கள் வரப்பெற்றன.
இக்கூட்டத்தில், பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் ரவி, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் பண்டரிநாதன், ஆதிதிராவிடா் நல அலுவலா் தேன்மொழி, பழங்குடியினா் நல அலுவலா் அசோக்குமாா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
