மதுக்கடை முற்றுகை: த.வெ.க.வினா் 5 போ் கைது
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் மதுக்கடையை அகற்றக் கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதில் தவெகவினா் 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பாலக்கோடு தக்காளி சந்தை எதிரில் அண்மையில் திறக்கப்பட்ட எப்எல் 2 வகை மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பங்கேற்ற, அக்கட்சியினா் வீரசானூரைச் சோ்ந்த வினோத்குமாா் (35), ஜெமினி (26), காசியம்பட்டியைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (24), ஜோதிஅள்ளியைச் சோ்ந்த கணேசன் (42), கிருஷ்ணன் (45) ஆகியோரை பாலக்கோடு போலீஸாா் அனுமதி இன்றி கூடுதல், தனியாா் சொத்துகளைச் சேதப்படுத்துதல், காவல் துறையினரை பணி செய்யவிடமால் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்தனா்.
அதேபோல, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 105 போ் மீது அனுமதி இன்றி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
