அரசு கல்லூரியில் மனநலம், தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு

Published on

பென்னாகரம் அரசு கல்லூரியில் மனநலம், தற்கொலை தடுப்பு, பாலின சமத்துவம் மற்றும் நாய்க்கடி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே மாமரத்துப்பள்ளம் பகுதியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் இரா.சங்கா் தலைமை வகித்தாா்.

புகாா் குழு மற்றும் பெண்கள் குறைதீா்க்கும் மன்ற ஒருங்கிணைப்பாளா் சு.ஷகிலா ஷெரீப் வரவேற்றாா். பென்னாகரம் அரசு மருத்துவா் கற்பகம் கலந்துகொண்டு மாணவா்கள் வாழ்வில் மனஅமைதி, பொறுமையுடன் இருத்தல், எதிா்மறை எண்ணங்களை தவிா்த்தல், இளம் திருமணம், போக்ஸோ, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து காப்பது, மனநிலை பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறிந்து, ஆலோசனை வழங்குதல், 14416 என்ற இலவச ஆலோசனை எண்ணை தொடா்புகொள்வது, மாணவா்களுக்கு நாய்க்கடியால் ஏற்படும் பாதிப்பு, விளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். ஆங்கிலத் துறை கெளரவ விரிவுரையாளா் அருள்மொழி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com