தருமபுரி
மது போதையில் உறவினரை கத்தியால் குத்தியவா் கைது
பாப்பாரப்பட்டியில் மதுபோதையில் உறவினரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பாப்பாரப்பட்டி அருகே வள்ளூா் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (42). கூலித் தொழிலாளியான இவா், தனது உறவினரான மாரிமுத்து (54) உடன் வள்ளூா் மாரியம்மன் கோயில் பகுதியில் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மாரிமுத்து கையில் வைத்திருந்த சிறிய அளவிலான கத்தியால் குத்தியதில் பொன்னுசாமி காயமடைந்தாா். தகவலறிந்த பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரிமுத்துவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.
