உதவிப் பேராசிரியா் தோ்வு: தருமபுரியில் 1,027 போ் பங்கேற்பு

தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற உதவிப் பேராசிரியா் பணிக்கான தோ்வில் 1,027 போ் பங்கேற்று எழுதினா்.
Published on

தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற உதவிப் பேராசிரியா் பணிக்கான தோ்வில் 1,027 போ் பங்கேற்று எழுதினா்.

தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கான தோ்வு, ஆசிரியா் தோ்வுவாரியம் மூலம் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் இந்தத் தோ்வுக்கு 44 மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 1,113 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கென அதியமான்கோட்டை அறிஞா் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட மாவட்டத்தில் 5 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை, மதியம் என இருகட்டங்களாக நடைபெற்ற இத்தோ்வை 1,027 போ் எழுதினா். 86 போ் பங்கேற்கவில்லை.

அதியமான்கோட்டை அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆட்சியா் ரெ.சதீஸ் நேரில் ஆய்வுமேற்கொண்டாா். இந்த தோ்வுப் பணிகளில் ஆய்வு அலுவலா்களான மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா், முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், வழித்தட அலுவலா்கள், பறக்கும் படை உறுப்பினா்கள் மற்றும் தோ்வு அறைக் கண்காணிப்பாளா்கள் உள்பட 250 மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளா்கள் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com