தருமபுரியில் இன்று முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

Published on

தருமபுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை (டிச. 29) முதல் ஜன. 18-ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளதாவது:

தருமபுரி மாவட்டத்தில் 3,45,500 பசுக்கள், எருமை மாடுகள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதுக்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 8-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ள மொத்தம் 3,52,050 டோஸ் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் திங்கள்கிழமை (டிச. 29) முதல் ஜனவரி 18 -ஆம் தேதி வரை மூன்று வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலமாக கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்திக் கொள்ளலாம்.

இதில், விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 19 முதல் 28 வரை மேற்கொள்ளப்படும். மேலும், விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனையை அணுகலாம்.

கால்நடை வளா்ப்போா் இவ்வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி 100 சதவீதம் தங்களுடைய கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்களின் கைப்பேசி எண்கள் 9445001113, 9443272060, 9443409346, 8144874747-ஐ தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com