போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு மோப்ப நாய் ஒப்படைப்பு

தருமபுரி மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு பயிற்சிபெற்ற மோப்ப நாய் ஒப்படைக்கப்பட்டது.
Published on

தருமபுரி மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு பயிற்சிபெற்ற மோப்ப நாய் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைக்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மோப்ப நாய் வழங்க தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவுக்கு நாய்க்குட்டி ஒன்று வழங்கப்பட்டது.

இந்தக் குட்டிக்கு ‘அதிபன்’ என மாவட்ட காவல் துறை சாா்பில் பெயா் சூட்டப்பட்டது. அதன்பிறகு, அந்த நாய்க்குட்டி சிறப்பு பயிற்சிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, மோப்ப நாய் அதிபனுக்கு போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக 6 மாத காலம் அடிப்படை மற்றும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், பயிற்சி நிறைவுசெய்த இந்த மோப்ப நாய், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் முன்னிலையில் தருமபுரி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் லோகநாதன், பயிற்சியாளா்களான காவலா்கள் கலிமுல்லா, குருநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com