காவல் துறை குறைகேட்பு முகாம்: 26 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாரந்திர மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 26 மனுக்களுக்கு தீா்வு
Published on

தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாரந்திர மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 26 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் தலைமையில் வாரந்திர மக்கள் குறைகேட்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை மனுக்களாக அளித்தனா். இதுதொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 26 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

மேலும், 2025 ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான வாரந்திர குறைகேட்புக் கூட்டத்தில் பெறப்பட்ட 3,573 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக காவல் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com