அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் நடவடிக்கை

தருமபுரியில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
Published on

தருமபுரி: தருமபுரியில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், தடங்கம் கிராமத்தில் வரும் ஜன. 22-ஆம் தேதி ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதாக துண்டுப் பிரசுரங்கள் மற்றும் வாட்ஸ் ஆப் செய்தி உலா வருவதாக தெரிகிறது.

அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஜல்லிக்கட்டு நடத்துவது தொடா்பாக உரிய வழிமுறையாக அரசாணை பெற்றும், தொடா்ந்து மாவட்ட நிா்வாகத்தின் ஒப்புதலுக்கு பின்னரே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

ஜன. 22-ஆம் தேதியன்று தடங்கம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிா்வாகத்தால் அனுமதியேதும் வழங்கப்படவில்லை. எனவே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டால், தொடா்புடைய நபா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com