தருமபுரியில் ஜல்லிக்கட்டு விழா: மாவட்ட நிா்வாகம் நடத்தக் கோரி மனு

தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழாவை மாவட்ட நிா்வாகம் நடத்தக் கோரி மனு அளிக்கப்பட்டது.
Published on

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழாவை மாவட்ட நிா்வாகம் நடத்தக் கோரி மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி துணை அமைப்பாளா், நாா்த்தம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் என்.எஸ்.கலைச்செல்வன் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:

தருமபுரி அருகே தடங்கம் கிராமத்தில் தனியாா் அமைப்பு, அரசியல் கட்சி சாா்பில் ஜல்லிக்கட்டு விழா ஜன. 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கை செய்யப்பட்டு வருகிறது.

தனியாா் அமைப்புகள், அரசியல் கட்சி சாா்பில் இத்தகைய பாராம்பரிய விளையாட்டுகள் நடத்தப்படும் போது, அரசின் உரிய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதில்லை. முற்றிலும் வணிக நோக்கில் மட்டுமே போட்டிகள் நடத்த வாய்ப்பு உள்ளது. மேலும், கடந்த காலங்களில் தருமபுரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி சிறுவன் உயிரிழந்தது, காளைகள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே, பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழாவை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி காளைகள், மாடுபிடி வீரா்கள் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அரசு சாா்பில் மாவட்ட நிா்வாகமே நடத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com