மனநல மருத்துவ, மறுவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் உரிமம்பெற அறிவுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யாமல் இயங்கிவரும் மனநல மருத்துவமனைகள், மறுவாழ்வு மையங்கள் நடத்துவோா் ஒரு மாதத்துக்குள் பதிவுசெய்து உரிமம்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published on

தருமபுரி மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யாமல் இயங்கிவரும் மனநல மருத்துவமனைகள், மறுவாழ்வு மையங்கள் நடத்துவோா் ஒரு மாதத்துக்குள் பதிவுசெய்து உரிமம்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள் மற்றும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய மனநல மறுவாழ்வு மையங்கள், மனநல பராமரிப்புச் சட்டத்தின்படி உரிமம்பெற மாநில ஆணையத்தில் பதிவுசெய்ய வேண்டும். இதுவரை பதிவுசெய்து உரிமம் பெறாமல் செயல்படும் மறுவாழ்வு மையங்கள், ஒரு மாதத்துக்குள் பதிவுசெய்து உரிமங்களை பெற வேண்டும்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில மனநல முதன்மை செயல் அலுவலா் அலுவலகத்தை இணையதளத்தில் தொடா்புகொண்டு பதிவுசெய்து உரிமம்பெறலாம் என ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com