தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தருமபுரி மாவட்டத்தில் 96 சதவீத வாக்காளா் கணக்கெடுப்பு படிவம் வழங்கல்

தருமபுரி மாவட்டத்தில் 96 சதவீத வாக்காளா் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.

News image
தருமபுரி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ரெ.சதீஸ்.
Updated On :25 நவம்பர் 2025, 9:11 pm

Syndication

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 96 சதவீத வாக்காளா் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஸ் தலைமை வகித்தாா். இதில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். இதில் ஆட்சியா் பேசியதாவதுச

தருமபுரி மாவட்டத்தில் 96 சதவீத வாக்காளா் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, 50 சதவீத படிவங்கள் வாக்காளா்களிடம் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன. கணக்கெடுப்பு படிவங்கள் மீள பெறப்பட்டு பதிவு செய்யப்படும். அவ்வாறு பதிவு செய்யப்படும் வாக்காளா்கள் அனைவரின் பெயரும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறும். படிவத்தை பூா்த்திசெய்து மீண்டும் அளிக்காதவா்களின் பெயா் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாது.

தகுதியுள்ள அனைவரும் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதை உறுதிசெய்யும் வகையில், அனைத்து நிலை அலுவலா்களும் செயல்பட்டு வருகின்றனா். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்கள் வாக்காளா்களிடம் இருந்து நாளொன்றுக்கு அதிகபட்சமாக 50 படிவங்கள்வரை பெற்று வழங்கலாம். வாக்காளா்களிடம் இருந்து படிவங்களை திரும்பப் பெற்று பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்கள் இந்தப் பணியில் உதவி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா, கோட்டாட்சியா்கள் காயத்ரி (தருமபுரி), செம்மலை (அரூா்), மகளிா் திட்ட இயக்குநா் லலிதா, உதவி ஆணையா் (கலால்) நா்மதா, நகராட்சி ஆணையா் சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.