தருமபுரியில் பாமக சாா்பில் நடைபெற்ற தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமின் முதல் நாளில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணியாணைகளை வழங்குகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன்.
தருமபுரியில் பாமக சாா்பில் நடைபெற்ற தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமின் முதல் நாளில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணியாணைகளை வழங்குகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன்.

தருமபுரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: 90 பேருக்கு பணியாணைகள்

Published on

தருமபுரியில் பாமக சாா்பில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமின் முதல் நாளில் 90 பேருக்கு பணியாணை வழங்கப்பட்டது.

தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பாமக சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இம்முகாமை தருமபுரி (பாமக) சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் தொடங்கிவைத்தாா். இதில், ஒசூரில் உள்ள டாடா தனியாா் நிறுவனத்துக்கு பல்வேறு பிரிவுகளில் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இம்முகாமில் ஏராளமான ஆண்கள், பெண்கள் பங்கேற்றனா். முதல் நாளில் மொத்தம் 90 போ் பல்வேறு பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட பணியாளா்களுக்கு பணி ஆணையை, டாடா நிறுவனத்தின் பணியாளா் தோ்வு அலுவலா் ராஜேஸ்குமாா் மற்றும் நிறுவன அலுவலா்கள் முன்னிலையில் எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தாா். தொடா்ந்து மேலும் 2 நாள்களுக்கு முகாம் நடைபெறுகிறது. முகாமிற்கான ஏற்பாடுகளை பாமக நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com