தருமபுரி நாகாவதி அணையில் மீன்பிடி ஒப்பந்த உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

Published on

தருமபுரி நாகாவதி அணையில் மீன்பிடி ஒப்பந்த உரிமம் பெற இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகாவதி அணையில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் 5 ஆண்டுகளுக்கான மீன்பிடி ஒப்பந்த உரிமம் இணையவழி பொது ஏலம் மூலம் முடிவு செய்யப்படுகிறது. இதற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான மின்னனு ஒப்பந்தப் புள்ளிகள் ஆணையா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தம் குறித்த விவரங்களை என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் ஒப்பந்தபுள்ளி படிவம் மற்றும் இதர படிவங்களை இணையதளத்தில் 19494/ எப்3/24 என்ற ஏல அறிவிப்பு எண்ணை உள்ளீடு செய்து கட்டணமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை நவம்பா் 10 ஆம் தேதி காலை 9 மணி வரை அனுப்பலாம்.

இயக்குநா் அலுவலகத்தையும் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். ஏல அறிவிப்பில் மாற்றங்கள் இருந்தால் இணையதளம் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும்.

இதுதொடா்பான விவரங்களைப் பெற உதவி இயக்குநா் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், (பழைய கட்டடம்) இரண்டாம் தளம், தருமபுரி - 636 705 என்ற முகவரியிலோ அல்லது 04342-232311 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com