தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் புத்தாண்டு மது விற்பனை ரூ. 2.80 கோடி
தருமபுரி மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ரூ. 2.80 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ரூ. 2.80 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் 66 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அவற்றின் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட தினங்களில் மது விற்பனை வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக் கடைகளில் ரூ. 2 கோடியே 80 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்தாண்டைவிட ரூ. 30 லட்சம் கூடுதல் எனக் கூறப்படுகிறது.
