சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

Published on

தருமபுரி அருகே வேன் மோதியதில் பெண் நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், வேப்பிலைஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் கோமதி (31). இவரது கணவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டாா். இவருக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளன. தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் தங்கி கூலி வேலை செய்துவந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை ஏரி வேலைக்கு சென்றுவிட்டு மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது ராயக்கோட்டை- தருமபுரி சாலையில் கொலசன அள்ளி மேம்பாலம் அருகே தருமபுரி நோக்கி வந்த பிக்கப் வேன் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கோமதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com