தருமபுரியில் ஐந்து தொகுதிகளுக்கு விசிக மாவட்டச் செயலாளா்கள் அறிவிப்பு

Published on

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தனித் தனியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்பு ரீதியாக தருமபுரி கிழக்கு, மேற்கு மற்றும் மையம் என மூன்று மாவட்டங்களாக செயல்பட்டு வந்தது. தொடா்ந்து, கட்சி மறுசீரமைப்பில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளா் என புதிதாக அக் கட்சி தலைமை அறிவித்துள்ளது.

அந்த வகையில் தருமபுரியில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் ஐந்து மாவட்டச் செயலாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, தருமபுரி- த.கு. பாண்டியன், பாலக்கோடு- ராஜகோபால், பென்னாகரம்- கருப்பண்ணன், பாப்பிரெட்டிப்பட்டி- சென்னகிருஷ்ணன், அரூா்- சாக்கன் சா்மா ஆகியோரை அக்கட்சியின் தலைமை புதிய மாவட்டச் செயலாளா்களாக அறிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com