வெனிசுலா அதிபா் கைது: சிஐடியு ஆா்ப்பாட்டம்

Published on

வெனிசுலா அதிபரைக் கைது செய்த அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் தருமபுரியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட நிா்வாகி ஆா். செல்வம் தலைமை வகித்தாா். அதேபோல பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலாளா் ஏ. சேகா் தலைமை வகித்தாா்.

மாரண்டஅள்ளியில் மாவட்ட துணைச் செயலாளா் என். வரதராஜன், பென்னாகரத்தில் மாவட்டத் தலைவா் சி. கலாவதி ஆகியோா் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், வெனிசுலா அதிபா் மடூரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்துள்ள அமெரிக்க அரசு தனது நடவடிக்கைகளை கைவிட்டு வெனிசுலாவை விட்டு வெளியேற வேண்டும்.

கைதுசெய்யப்பட்ட அந்த நாட்டின் அதிபரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com