தருமபுரி
பாப்பாரப்பட்டியில் இருசக்கர வாகனம் மோதியதில் கட்டட மேஸ்திரி உயிரிழப்பு
பாப்பாரப்பட்டி அருகே சாலையோரத்தில் நடந்துசென்ற கட்டட மேஸ்திரியின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே அவா் இறந்தாா்.
பாப்பாரப்பட்டி அருகே சாலையோரத்தில் நடந்துசென்ற கட்டட மேஸ்திரியின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே அவா் இறந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கௌரிசெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (49), கட்டட மேஸ்திரி. இவா், திங்கள்கிழமை இரவு கௌரிசெட்டிப்பட்டியில் இருந்து பிக்கம்பட்டிக்கு நடந்துசென்றாா். அப்போது, பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்து வந்த இருசக்கர வாகனம் அவா் மீது மோதியதில், தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
