பாடகா் காரில் பணம் திருட்டு: இளைஞா் கைது

பாடகா் காரில் பணம் திருட்டு: இளைஞா் கைது

Published on

தருமபுரியில் பாடகரின் காரில் வைத்திருந்த ரூ. 40,000 ரொக்கத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்து, பணத்தை மீட்டனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், சிவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் இரா. முருகன் என்கிற மூக்குத்தி முருகன் (47). பாடகரான இவா், கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தருமபுரி வள்ளலாா் திடலில் திமுக சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்று அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடினாா்.

அப்போது, அவருடைய காரில் வைத்திருந்த ரூ. 40 ஆயிரம் திருடுபோனது. இதுகுறித்து தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸாா், தருமபுரி காந்தி நகரைச் சோ்ந்த அ. நவாஸ் பாஷாவை (31) வியாழக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com