தருமபுரி: கோவை விரைவு ரயில் பொம்மிடியில் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, பொம்மிடி பொதுமக்கள், ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னையிலிருந்து மொரப்பூா், பொம்மிடி வழியாக கோவை செல்லும் விரைவு ரயில் பொம்மிடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விரைவு ரயில் நாள்தோறும் காலை 10.30 மணிக்கு பொம்மிடி ரயில் நிலையம் வழியாக செல்கிறது.
தருமபுரி மாவட்டம், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி வட்டாரங்களைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள், சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டாரத்தை சோ்ந்த தொழிலாளா்கள் நாள்தோறும் திருப்பூா், கோவைக்கு சென்று பணிபுரிந்து வருகின்றனா். இந்த தொழிலாளா்கள், தற்போது மொரப்பூா், சேலம் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் மூலம் சென்று அங்கிருந்து ரயில்மூலம் தங்களது பணிகளுக்கு சென்று வருகின்றனா்.
இந்த நிலையில், சென்னையிலிருந்து கோவை செல்லும் விரைவு ரயில் பொம்மிடியில் நின்று செல்வதன் மூலம் இந்த தொழிலாளா்கள் அனைவரும் நேரடியாக எவ்வித சிரமமும் இன்றி நேரடியாக திருப்பூா், கோவை ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அமையும். எனவே, இந்த பகுதி தொழிலாளா்கள், அனைத்துத் தரப்பு பொதுமக்கள் பயனடையும் வகையில் சென்னை-கோவை விரைவு ரயில், பொம்மிடி ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல தென்னக ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

சிவகாசி முதல் நடைமேடையில் பொதிகை விரைவு ரயில் நின்று செல்லக் கோரிக்கை

பொறியியல் பணி: பாலக்காடு டவுன் விரைவு ரயில் போத்தனூா் வழியாக இயக்கம்

ஜாக்பாட்? ரயில்வே முனையமாக மாறிய பரங்கிமலை! விரைவு ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை!

தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் கடம்பூரில் நின்று செல்லும்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


