வேளாண் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற வேளாண் தொழில்நுட்ப விளக்க நிகழ்ச்சி

கிராமப் பகுதிகளில் வேளாண் கல்லூரி மாணவா்கள், கிராம விவசாயிகளுக்கான நவீன மற்றும் குறைந்த செலவு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து செயல் விளக்கம்
Published on

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூா் வட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் வேளாண் கல்லூரி மாணவா்கள், கிராம விவசாயிகளுக்கான நவீன மற்றும் குறைந்த செலவு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.

பொள்ளாச்சியில் உள்ள வானவராயா் வேளாண் கல்லூரி மாணவா்கள் ஜெ.ஹரன், செ.புவனேஷ், ஜெ.லிகேஷ், மு.முத்துவேல், ப.ராஜா, மு.சஞ்சீவிகுமாா், ம.ஷிதுகிருஷ்ணா, சா. தங்கராஜ், ஆ.வில்லவன்கோதை உள்ளிட்டோா் கொண்ட குழுவினா், தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான செயல்விளக்கம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

அந்தவகையில் அரூா் வட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு சென்று விவசாயிகளை அவா்களது வேளாண் நிலங்களிலேயே கடந்த இரு நாள்களாக சந்தித்து, நவீன மற்றும் குறைந்த செலவில் செயல்படுத்தப்படும் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்களை செய்து காட்டினா்.

இதில் 3ஜி எனப்படும் (இஞ்சி,–பூண்டு,–மிளகாய்) இயற்கை கரைசல் தயாரிப்பு மற்றும் அவற்றின் பயன்பாடுகள், தேங்காய் வோ் ஊட்டச்சத்து மருந்து மூலம் மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்பம், நெல் பயிரில் முட்டை மிதப்பு தொழில்நுட்பம் மூலம் தரமான விதைகளைகஈ தோ்வு செய்வது உள்ளிட்டவை குறித்த பல்வேறு தொழில்நுட்ப விளக்கங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.

Dinamani
www.dinamani.com