/
அரூா் அம்பேத்கா் நகரில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
அரூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சின்னதாசன் மகன் ரிஷி ஆதவன் (25). இவா் வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு, சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தாா்.
தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினா் அவரது சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த சம்பவம் குறித்து ரிஷி ஆதவனின் சகோதரி தீபலட்சுமி அளித்த புகாரின் பேரில் அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].









