அ.பள்ளிப்பட்டி அருகேயுள்ள சின்ன ஏரியில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அ.பள்ளிப்பட்டி அருகே உள்ள சின்ன ஏரி சுமாா் 50 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். அ.பள்ளிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் இறந்த கோழிகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளை மா்ம நபா்கள் இரவு நேரங்களில் ஏரியில் கொட்டி செல்கின்றனா்.
இதனால், ஏரியில் உள்ள தண்ணீா் மாசடைந்து துா்நாற்றம் வீசி வருகிறது. ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீா் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும், ஏரியின் கரைப் பகுதியில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.
எனவே, சின்ன ஏரியில் கோழி இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் கொட்டுவதை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

குரும்பூண்டி ஊராட்சி சின்ன குளத்தை தூா்வாரி படித்துறை கட்டக் கோரிக்கை

பிடமனேரி ஏரியில் இறந்து மிதந்த மீன்கள்: மீன்வளத் துறையினா் ஆய்வு

செயல்படாத சின்ன வெங்காயம் மதிப்புக் கூட்டும் மையம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர விவசாயிகள் கோரிக்கை







