புதிய மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் சிகிச்சை பெற சேலத்தில் 11 மருத்துவமனைகள் தேர்வு

சேலம், ஜன. 14: திருத்திய மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற சேலம் மாவட்டத்தில் 11 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூ
Updated on
1 min read

சேலம், ஜன. 14: திருத்திய மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற சேலம் மாவட்டத்தில் 11 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை, அஸ்தம்பட்டியில் உள்ள சேலம் மெடிக்கல் சென்டர், காந்தி ரோடு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, பிருந்தாவனம் சாலையில் உள்ள பிரணவ் மருத்துவமனை, விநாயகா மிஷன் நவீன மருத்துவமனை, 2-வது அக்ரஹாரத்தில் உள்ள நடராஜ் நர்ஸிங் ஹோம், விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குகை பி.பி. மருத்துவமனை, கல்பாரப்பட்டி அன்னபூர்ணா மருத்துவமனை, கருப்பூர் ராஜம் மருத்துவமனை ஆகியவற்றில் 1,016 சிகிச்சைகளுக்கும், 113 தொடர் சிகிச்சைகளுக்கும், 23 நோய்களை கண்டறிந்தும் சிகிச்சைகள் பெறலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு சுகாதாரப் பணிகள் இணை இயக்குநரை 0427-2263775 என்ற எண்ணிலும், துணை இயக்குநரை 0427-2450023 என்ற எண்ணிலும், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரை 0427-2210563 என்ற எண்ணிலும், மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையை 04298-224404 என்ற எண்ணிலும், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியரை 0427-2452121 என்ற எண்ணிலும், மருத்துவ காப்பீட்டுத்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.ஜெயராஜை 73730 04312 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com