வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பொம்மிடியில் கோட்டாட்சியர் ஆய்வு

பொம்மிடி வட்டாரப் பகுதியில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரூர் வருவாய்க் கோட்டாட்சியர் ரா. கவிதா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:57 am

DIN

பொம்மிடி வட்டாரப் பகுதியில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரூர் வருவாய்க் கோட்டாட்சியர் ரா. கவிதா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பொம்மிடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு நோய் தடுப்புப் பணிகள், கொசு மருந்து தெளித்தல், கழிவுநீர் கால்வாய் தூய்மைப் பணிகள், பழைய பிளாஸ்டிக், டயர்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருள்களை அகற்றுதல், குடிநீர் பாதுகாப்பு, டெங்கு விழிப்புணர்வு பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக, பொ. மல்லாபுரம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை கோட்டாட்சியர் ரா.கவிதா வழங்கினார். இதில், செயல் அலுவலர் மா. ராஜா ஆறுமுகம்,  சுகாதார ஆய்வாளர் வினோத், வருவாய் ஆய்வாளர் மகேஸ்வரன், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.