காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி புதன்கிழமை தருமபுரி, மொரப்பூர், ஒசூர் ரயில் நிலையங்களில் மறியல் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 377 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலதாமதம் செய்வதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மன்னார்குடியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, புதன்கிழமை தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, மொரப்பூர் ஆகிய இரு இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. தருமபுரி ரயில் நிலையத்துக்கு பகல் 1.10 மணிக்கு வந்த குர்லா விரைவு ரயிலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறித்து முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். தேவராசன் தலைமை வகித்தார்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ந. நஞ்சப்பன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ். சின்னசாமி, ஏ. கந்தசாமி, எம். மாதேஸ்வரன், மாதர் சம்மேளன மாவட்டச் செயலர் விஜயா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். சிறிதுநேரம் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்த போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 88 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மொரப்பூரில்.... மொரப்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 29 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மொரப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கா.சி.தமிழ்க்குமரன் தலைமை வகித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில உரிமைகளை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரை மொரப்பூர் போலீஸார் கைது செய்தனர்.
ஒசூரில்... ஒசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 260 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் எம். லகுமைய்யா, முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.சி. நஞ்சப்பா உள்ளிட்ட 260 பேர் ஒசூர் ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.
அவர்களை துணைக் கண்காணிப்பாளர் விஜய் கார்த்திக் ராஜ், ஒசூர் நகரக் காவல் ஆய்வாளர் ராஜா சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது

சுவாமி சிலையை சேதப்படுத்தியவா் கைது

பழையகுற்றாலம் அருவியில் தணியாத வெள்ளப்பெருக்கு
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


