சொத்துத் தகராறில் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வட்டுவனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கலா (58). இவரது கணவர் மட்டி(எ) இருளப்பன். இவர்களுக்கு சொந்தமான இடம் குறித்து உறவினர்களுக்கு இடையே முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில், கலாவுக்கு சொந்தமான கிணறு, மின் மோட்டாரை அவரது உறவினர்கள் சேதப்படுத்தி கொலை செய்ய முயன்றனராம். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கலா, இருளப்பன், மகன் ராஜரத்தினம் (45), மருமகள் மாயா(42), பேத்தி, பேரன் உள்ளிட்ட 6 பேர் தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

90’ஸ் விஜய்!

சாதி குறித்து அவதூறு பேச்சு! எஸ்சி ஆணையத்தில் மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

யார் இந்த பில்லிசூன்ய மருத்துவர்? ஹாரி கேனை கோல் அடிக்க விடாமல் தடுத்த கானாவின் மந்திரவாதி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


