கிராம சபைக் கூட்டத்தை சட்டத்துக்கு உள்பட்டு முறையாக நடத்தக் கோரி, மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் தன்னார்வலர்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து, அவர்கள் அளித்த மனுவின் விவரம்: கிராம சபை என்பது மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பின் அடிநாதம் போன்றது. கிராமத்தின் பலம் வாய்ந்த அமைப்பாகும். எனவே, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஆண்டுக்கு நான்குமுறை கட்டாயம் கிராம சபைக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்துகின்றன. ஆனால், கிராம சபைக் கூட்டம் குறித்து உள்ளாட்சி அமைப்புகளால் முறையாக விளம்பர அறிவிப்புகள் செய்யப்படுவது இல்லை. இந்தக் கூட்டம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் சேருவதில்லை. இதனால், கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே பொதுமக்கள் பங்கேற்கின்றனர். சமூகத் தணிக்கையின் போது, பொதுமக்கள் கோரும் கோரிக்கைகள் மறுக்கப்படுகின்றன. எனவே, கிராம சபைக் கூட்டத்தை சட்டப்படி முறையாக நடத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுக் கலைக் கல்லூரிகளில் அதிக விண்ணப்பம் வந்திருக்கும் படிப்பு இதுதான்!

தமிழ்நாட்டில் இன்று 4, நாளை 3 மாவட்டங்களில் கனமழை!

போதைப் பொருள் கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பில்லை! ஜான் பிரிட்டோ

பிலிப்பின்ஸ் நிலநடுக்கம்: 37 பேர் பலி; 20,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


