ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பிளஸ் 2 தேர்வு: கொங்கு மெட்ரிக். பள்ளி 100 சதவீத தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொரப்பூர் கொங்கு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Updated On :21 மே 2018, 10:47 pm

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொரப்பூர் கொங்கு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் கொங்கு மெட்ரிக். பள்ளியின் முதல் மதிப்பெண் 1,174 ஆகும். இப் பள்ளி மாணவர்கள் 1150 - க்கு மேல் 6 பேரும், 1100-க்கு மேல் 26 பேரும், 1000-க்கு மேல் 84 பேரும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். கணிதம் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண்களை 12 பேரும், வேதியியல் பாடத்தில் தலா 199 மதிப்பெண்களை 4 பேரும், ஆங்கிலம் பாடத்தில் முதல் மதிப்பெண் 194 -ம், 190-க்கு மேல் 10 பேரும், தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண்ணாக 197-ம், 190-க்கு மேல் 47 பேரும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
மேலும், இப் பள்ளியின் சராசரி மதிப்பெண் 937.5 ஆகும். பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை கொங்கு கல்வி
அறக்கட்டளையின் தலைவர் டி.சந்திரசேகர், செயலர் ஏ.மோகன்ராசு, பொருளாளர் வரதராஜன், தாளாளர்கள் இளங்கோ, தீர்த்தகிரி, பள்ளி முதல்வர், நிர்வாகக்குழு இயக்குநர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.