கோடியூரில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகேயுள்ள கோடியூரில் கிடப்பில் போடப்பட்ட தார்ச் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அக் கிராம மக்கள் வலியுறுத்தினர்.
Updated on
1 min read


தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகேயுள்ள கோடியூரில் கிடப்பில் போடப்பட்ட தார்ச் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அக் கிராம மக்கள் வலியுறுத்தினர்.
நல்லம்பள்ளி வட்டத்திற்குள்பட்ட அதியமான்கோட்டை அருகேயுள்ளது கோடியூர் கிராமம். இக்கிராமத்தலிருந்து வெங்கட்டம்பட்டி-அதியமான்கோட்டை செல்லும் சாலை சுமார் 2 கி.மீ.தொலைவுக்கு பழுதாகியிருந்தது .இச் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, பழுதான சாலையை புதியதாக அமைக்கும் பணி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில், முதல்கட்டமாக, பழுதான சாலை முற்றிலும் பெயர்த்து, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. இருப்பினும், பல நாள்களை கடந்தும், சாலை அமைக்கும் பணி தொடராமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இதனால், கோடியூர் கிராம மக்கள் மற்றும் அச்சாலை வழியாக அதியமான்கோட்டை, நல்லம்பள்ளிக்கு வாகனங்களில் செல்வோர் ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட சலையில் பயணிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க நடவடிக்ககை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் கோடியூர் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com