சென்றாயம்பட்டியில் குடிநீர் பற்றாக்குறை
By DIN | Published On : 01st April 2019 10:22 AM | Last Updated : 01st April 2019 10:22 AM | அ+அ அ- |

சென்றாயம்பட்டியில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
காரிமங்கலம் ஒன்றியத்தின் காளப்பன அள்ளி பஞ்சாயத்தில் உள்ள சென்றாயம்பட்டி கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஒகேனக்கல் குடிநீர் இரண்டு தினங்களுக்கு ஓருமுறை மட்டுமே வருவதாகவும், கால்நடைகள் அதிகளவில் வளர்க்கும் இப்பகுதியில் நிலத்தடிநீர் குறைவால் கிணற்றுப் பகுதிகளில் தண்ணீர் மிகவும் குறைந்துவிட்டதாகவும், இதனால் வேறு வழியின்றி பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி கால்நடைகளுக்கும், அடிப்படைத் தேவைகளுக்கும் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே, குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.