தீர்த்தமலையில் அ.ம.மு.க. பிரசாரம்
By DIN | Published On : 01st April 2019 10:20 AM | Last Updated : 01st April 2019 10:20 AM | அ+அ அ- |

அரூரை அடுத்த தீர்த்தமலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.
தீர்த்தமலையில் அரூர் சட்டப்பேரவைத் தொகுதியின் அ.ம.மு.க. வேட்பாளர் ஆர்.முருகனை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தொடர்ந்து, வீரப்பநாய்க்கன்பட்டி, அண்ணாநகர், காட்பாடி, மாம்பாடி, வேப்பம்பட்டி, ஈட்டியம்பட்டி, குரும்பட்டி, பொய்யப்பட்டி, கோபால்பட்டி, கூடலூர், முத்தானூர் உள்ளிட்ட கிராமப் பகுதியில் அமமுகவினர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எச்.புதுப்பட்டியில் அ.ம.மு.க. தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பி.பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.