அதியமான் மகளிர் கல்லூரியில் விவேகானந்தரின் ரத யாத்திரைக்கு வரவேற்பு
By DIN | Published On : 04th August 2019 05:12 AM | Last Updated : 04th August 2019 05:12 AM | அ+அ அ- |

ஊத்தங்கரைஅதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விவேகானந்தர் நினைவு தினத்தை முன்னிட்டு ரத யாத்திரைக்கு சனிக்கிழமை வரவேற்பு விழாநடைபெற்றது.
முன்னதாக தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் ஆ.ராஜகுமாரி வரவேற்புரைஆற்றினார். அதியமான் கல்விக் குழுமத்தின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் விவேகானந்தரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து தலைமையுரையாற்றினார். கல்லூரியின் செயலர் ஜெ.மே.ஷோபா தலைமை வகித்து விவேகானந்தரின் சமூகப் பணி குறித்து சிறப்புரையாற்றினார். அதியமான் கல்விக் குழுமத்தின் நிர்வாகஅலுவலர் சீனி.கணபதிராமன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ப.உமாமகேஷ்வரி வாழ்த்துரை வழங்கினார்.
சேலம் ராமகிருஷ்ணா மடத்திலிருந்து வருகை புரிந்த சுவாமிஜி, பெண்மையின் தெய்வத் தன்மை குறித்து சொற்பொழிவாற்றினார். இதனைத் தொடர்ந்து, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, மாறுவேடப் போட்டி முதலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவியருக்கு கல்லூரிச் செயலரும், சிறப்பு விருந்தினரும் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர். ஆங்கிலத் துறை பேராசிரியர் தேன்மொழி நன்றி கூறினார்.
அதே போல் சுவாமி விவேகானந்தரின் ரத யாத்திரை விழா கல்லாவி பனமரத்துப்பட்டியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா சாரதா சேவாஸ்ரமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை அம்பத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆஸ்ரம தலைவர் சண்முகம், செயலர் பாரதி ஆகியோர் வழிகாட்டுதலின்படி நாட்ரம்பள்ளி ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி தியாகராஜானந்தஜி மகராஜ், சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆஸ்ரமம் ஸ்ரீமத் சுவாமி சித்கதானாந்தஜி மகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றினர்.