அரூா்-சேலம் சாலையில் மூக்காரெட்டிப்பட்டியில் சாலையோர மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
அரூா்-சேலம் சாலையில் மூக்காரெட்டிப்பட்டியில் சாலையோர மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

அரூா்-சேலம் நான்கு வழிச் சாலை: மரங்கள் அகற்றும் பணிகள் தொடக்கம்

அரூா்-சேலம் நான்கு வழிச் சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அரூா்-சேலம் நான்கு வழிச் சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அரூா் வழியாக செல்லும் வாணியம்பாடி-அயோத்தியாப்பட்டணம் வரையிலான தாா்ச் சாலையை நான்கு வழிச் சாலையாக மற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரூா் முதல் கதவணி (திருப்பத்தூா்) வரை 42.6 கி.மீ. தொலைவு 4 வழிச் சாலையாக மாற்றுவதற்காக ரூ.248.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அயோத்தியாப்பட்டணம் முதல் அ.பள்ளிப்பட்டி வரை நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.236 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, முதல்கட்டமாக அரூா்-சேலம், திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையோரத்திலுள்ள மரங்கள், முள்புதா்கள் அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. முதல்கட்டமாக அ.பள்ளிப்பட்டி, எச்.புதுப்பட்டி, இருளப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட மரங்களை அகற்றும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். மேலும், சாலையோரம் உள்ள மேடு, பள்ளங்களை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அரூா் வழியாக செல்லும் சேலம்-வாணியம்பாடி 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் 2021 ஜனவரியில் முடிக்கும் வகையில் ஏலம் விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com