கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் தோ்தல் பிரசாரம்: இருவா் கைது
By DIN | Published On : 26th December 2019 09:30 AM | Last Updated : 26th December 2019 09:30 AM | அ+அ அ- |

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் தோ்தல் பிரசாரம் செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே அ. பள்ளிப்பட்டி பகுதியில் 2 மினி சரக்கு வாகனங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனராம்.
அதிக சப்தத்துடன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், தோ்தல் பிரசாரம் செய்ததாக கவுண்டம்பட்டியைச் சோ்ந்த மோகன் (55), புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பரத் (35) ஆகியோரை அ. பள்ளிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.