ஊதிய உயர்வு கோரி கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மனு
By DIN | Published On : 06th February 2019 08:51 AM | Last Updated : 06th February 2019 08:51 AM | அ+அ அ- |

ஊதிய உயர்வு, ஆண்டு முழுவதும் பணி வழங்கக் கோரி, கொசு ஒழிப்புப் பணியாளர்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது தொடர்பாக, தருமபுரி மாவட்ட கொசு புழு ஒழிப்புப் பணியாளர்கள் அளித்த மனு: தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொசு புழு ஒழிப்புப் பணியாளர்களாக கடந்த 10 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். தொடக்கத்தில், ஆண்டுக்கு 8 மாதங்கள் வழங்கப்பட்டு வந்த பணி, 2018-இல் மூன்று மாதம் மட்டும் வழங்கப்பட்டது. இதனால், ஏனைய நாள்களுக்கு பணி இல்லாததால், கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளோம். எனவே, எங்களுக்கு ஆண்டு முழுவதும் பணி வழங்கி ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை உயர்த்தி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...