தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி கேஜிபிவி உண்டு உறைவிடப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நடைபெற்றது.
இக் கண்காட்சியை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில், இயற்கை உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தயாரித்தல், நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் நிரம்பியதை கண்டறியும் கருவி, எளிய முறையில் துளையிடும் கருவி உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை மாணவ, மாணவியர் பார்வைக்கு வைத்திருந்தனர். இதனை பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் ஆகியோர் பார்வையிட்டனர்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி உதவித் திட்ட அலுவலர் தங்கவேல், பள்ளித் தாளாளர் சரவணன், பள்ளி ஒருங்கிணைப்பாள் மங்கையற்கரசி, தலைமை ஆசிரியை சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.