சுடச்சுட

  

  தருமபுரியில் புதிய மின்னணு ஓட்டுநர் உரிம அட்டையை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வழங்கினார்.
   தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, அரூர் மற்றும் பாலக்கோடு ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் புதியதாக ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மின்னணு ஓட்டுநர் உரிம அட்டை வழங்கும் பணி தொடங்கியது.
   தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாகன ஓட்டிகளுக்கு புதிய மின்னணு ஓட்டுநர் உரிம அட்டை வழங்கும் பணியை தொடக்கி வைத்து ஆட்சியர் சு.மலர்விழி பேசியது: மின்னணு ஓட்டுநர் உரிம அட்டை வழங்குவதன் மூலம் இனி போலியான அட்டைகளை தயாரிக்க முடியாது. மேலும், அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்களை அழிக்க முடியாது. இதில் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதால் புதுப்பித்தல் உள்ள பணிகளை பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். இந்த அட்டையில் உயர்தர பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. பொதுமக்கள் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் இந்த அட்டை அமைந்துள்ளது. இத்தகைய மின்னணு ஓட்டுநர் உரி அட்டை வழங்கும் பணி தருமபுரி மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai